ஊட்டியில் பலத்த மழை - கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் பலத்த மழை பெய்தது. கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
ஊட்டியில் பலத்த மழை - கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி
Published on

காந்தல்:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று இரவு 2-வது நாளாக மழை பெய்தது.

ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது. இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.

ஊட்டியில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இன்றும் சாரல் நீடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நேற்று மாலை வரை சாரல் மழை நீடித்தது. இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com