ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மீண்டும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை பகுதியில் கனமழை பெய்தது.
மழை
மழை
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மீண்டும் பரவலாக மழை பெய்தது. ஈரோடு நகரில் சாரல் மழை மட்டும் தான் பெய்தது. அதே சமயம் மாவட்டத்தின் வெளிப்புற பகுதிகளில் மழை கொட்டியது.

சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை பகுதியில் கனமழை பெய்தது. அங்கு 60 மி.மீ. மழை கொட்டியது.

இந்த மழையால் பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் வருகிறது. மேலும் சத்தியமங்கலம் கொடிவேரி அணை பவானிசாகர், குண்டேரிபள்ளம் அணை, கவுந்தப்பாடி கோபி உள்பட மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

கொடிவேரி அணை-20.2

பவானி சாகர்-19.8

சத்தியமங்கலம்-6

கவுந்தப்பாடி-3.8

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com