அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி

அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாநிலத்தில் நாஷ்வில்லே நகரின் அருகே இன்று நிர்வாணமாக வந்த மர்ம மனிதன் உணவகத்தின்மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள டென்னெஸ்ஸீ  மாநிலத்தில் நாஷ்வில்லே நகரின் புறநகர் பகுதியான அண்ட்டியாஷ் என்ற இடத்தில் வேஃப்ல் ஹவுஸ் என்னும் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

வார இறுதிநாள் என்பதால் இந்த உணவகத்தில் ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். (உள்ளூர் நேரப்பட்டி) இன்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில் கையில் துப்பாக்கியுடன் ஒரு மர்ம மனிதன் நிர்வாணமாக அந்த உணவகத்துக்குள் நுழைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்ட அந்த மர்ம நபர், காரில் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.

இந்த வெறித்தனமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com