”அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது” - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
”அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது” - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

சென்னை:

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூட்டாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. 

மேலும், அரசு பள்ளிகளின் நிலைப்பாடு குறித்த 20 கேள்விகள் தமிழக அரசுக்கு எழுப்பப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த கேள்விக்கு மக்களிடையே பரவலான ஆதரவு இருந்தது. 

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கை முடிவில் அரசு தெளிவாக உள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அவர்களாக அரசு பள்ளியை தேடி வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com