தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முழுமையாக சீரமைக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் இதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முழுமையாக சீரமைக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

மக்களவையில் இன்று தொழிலாளர் ஓய்வூதியம் தொடர்பான தனிநபர் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா பேசியதாவது:-

1995ம் ஆண்டு கொண்டு வந்த தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இந்த குழுவானது, ஓய்வூதிய திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வு செய்து, சீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், 58 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டம் முற்றிலும் சீரமைக்கப்படும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின்கீழ் அனைத்து பென்சன்தாரர்களுக்கும் மருத்துவ பயன் வழங்கப்படும். குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இப்போது ரூ.3000 ஆக உயர்த்தப்படமாட்டாது. புதிய சீரமைக்கப்பட்ட பென்சன் திட்டம் நடைமுறைக்கு வரும் வரையில், குறைந்தபட்ச பென்சன் 1000 ரூபாய் என்ற நிலையில் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com