

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த வேலவன் புதுக்குளம் கிராமத்தில் கடந்த 27-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துமலை (வயது43), பரமசிவன் (32), கண்ணன் (30), செந்தூர் பாண்டி (45) உள்பட 5 பேர் வாக்குப்பதிவு மையத்தில் அத்துமீறி நுழைந்தனர்.
மேலும் வாக்குப்பதிவுக்கு இடையூறு செய்யும் விதமாகவும், தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமலும் 5 பேரும் மிரட்டியுள்ளனர். உடனே தேர்தல் அலுவலர் சார்லஸ் திரவியம் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். உடனே அங்கு வந்த போலீசார் முத்துமாலை, பரமசிவன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, முத்து மாலையை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தர விட்டார்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் முத்து மாலையை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.