

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.
கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த் இன்று காலை தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.