கவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். உளவுப்பிரிவு ஐ.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும் குற்றவாளிகள் 2 பேரின் 3 உருவங்கள் அடங்கிய புகைப்படங்களை போலீசார் வெளியிட்டும் இதுவரை கொலையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக பிரவீன் குமார் என்பவரை கடந்த மாதம் 18-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பெயர் பிரவீன்குமார் என்பதும், இந்து யுவசேனா என்ற அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதும் கவுரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com