திருப்பதியில் இன்று பக்தர்களுக்கு இலவச அன்னதானம்

ஓட்டல் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று இலவச அன்னதானம் வழங்க தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் இன்று பக்தர்களுக்கு இலவச அன்னதானம்
Published on

திருப்பதி:

ஆந்திராவில் தென்னிந்திய ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், திருப்பதியில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, திருப்பதி பஸ் நிலையம, ரெயில் நிலையம், ஸ்ரீவாரி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அன்னதான கூடங்கள் அமைத்து பக்தர்களுக்கு உணவு பரிமாற தேவஸ்தான நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதேபோல், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மற்றும் அதன் துணை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com