மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், திருச்சி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com