நாட்டு மக்களிடம் பரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்க வேண்டும்: நஜ்மா ஹெப்துல்லா ஆவேசம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்னும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு பீகார், மணிப்பூர் முதல் மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களிடம் பரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்க வேண்டும்: நஜ்மா ஹெப்துல்லா ஆவேசம்
Published on

ஜம்மு:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா சமீபத்தில் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவரது இந்த கருத்துக்கு மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மணிப்பூர் முதல் மந்திரி நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரும் பரூக் அப்துல்லாவுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1948-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதி அரசியலமைப்பு சட்டத்தின்படியும், தார்மீகப்படியும், சட்டரீதியாகவும் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை மீட்பதுதான் நமது நாட்டின் முக்கிய குறிக்கோள். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று கூறிய பரூக் அப்துல்லா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நஜ்மா ஹெப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாட்னா நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பிற பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பது நமது அசைக்க முடியாத வாதமாக இருந்து வருகிறது என குறிப்பிட்டுள்ள நிதிஷ் குமார் பரூக் அப்துல்லாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com