திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி சாமி தரிசனம்

திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் இன்று காலை குடும்பத்தினருடன் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கிய காட்சி.
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கிய காட்சி.
Published on

திருமலை:

முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது 86-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை தனது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரி அசோக் சிங்கால் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பத்மாவதி தாயார் தங்கும் விடுதியில் தங்கினர். இன்று காலை 7 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது மனைவி மற்றும் மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com