

சென்னை:
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
ஜூன் மாதம் 27-ந்தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதற்கான ஆன்-லைன் பதிவு மே 1-ந்தேதி தொடங்கியது.
இதுவரை 6 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் முதல் நாளில் 4,738 மாணவர்களும், 2-ம் நாளில் 6,727 மாணவர்களும் 3-ம் நாளில் 6,608 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.
4-ம் நாளில் 5,150 மாணவர்களும், 5-ம் நாளில் 4,262 மாணவர்களும், 6-ம் நாளில் 4,265 மாணவர்கள் என மொத்தம் 31,750 பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைனில் பதிவு செய்ய மே 31-ந்தேதி கடைசி நாளாகும். பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசி நாளாகும்.
விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 20-ல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ல் வெளியிடப்பட உள்ளது.