

ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த கீ.வீரப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் மதி. இவரது மனைவி ரமணி (வயது 45). விவசாயிகளான இவர்கள், கறவை மாடுகளையும் வைத்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அப்போது, மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாட்டை ரமணி பிடித்து வந்து வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் வழக்கம்போல் கட்ட முயன்றார். எதிர் பாராதவிதமாக திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. இதில் ரமணியும், பசுமாடும் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து இறந்தனர்.
தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் ரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.