முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி - முதல்வர் பழனிசாமி

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த அறிவிப்பை ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டார்.  அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என முதல்வர் பழனிசாமி

தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அ.தி.மு.க.வை சீரும் சிறப்போடும், வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அயராது உழைப்பேன்.

அ.தி.மு.க.வை அடுத்த நூறாண்டு காலத்திற்கு வெற்றி இயக்கமாக உருவாக்கிட உறுதி ஏற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com