முதல்வர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு- மீண்டும் சென்னை திரும்பியது

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னை திரும்பினார். #EdappadiPalaniswami #FlightRepaired
முதல்வர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு- மீண்டும் சென்னை திரும்பியது
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல்வர் தூத்துக்குடி வரை விமானத்தில் சென்று , அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் காலையிலேயே  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com