பாரீசில் கார் மூலம் மோதி மசூதியை தகர்க்க முயற்சி: டிரைவர் கைது

பாரீசில் கார் மூலம் மோதி மசூதியை தகர்க்க முயற்சி செய்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரீசில் கார் மூலம் மோதி மசூதியை தகர்க்க முயற்சி: டிரைவர் கைது
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர், பாரீசில் சமீபத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரீசின் புறநகரில் கிரீடியல் நகரம் உள்ளது.

நேற்று இரவு அங்கு அதிவேகமாக ஒரு கார் வந்தது. வந்த வேகத்தில் அங்கிருந்த ஒரு மசூதியின் தூண்கள் மற்றும் தடுப்புகளில் மோதி நின்றது.

அதில் மசூதிக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று காரை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்தனர்.

43 வயதான அந்த நபர் ஆர்மினியாவை சேர்ந்தவர்.உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

இது ஒரு தீவிரவாத தாக்குதல் முயற்சி என பாரீஸ் பெரிய மசூதியின் இமாம் தலில் பொயுபாக்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் உள்துறை மந்திரி ஜெராட் கோலோம்ப் கூறும்போது, இத்தாக்குதலின் குறிக்கோள் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது என குறிப்பிட்டார்.

கடந்த 19-ந்தேதி வடக்கு லண்டனில் மசூதி மீது வேனை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com