நல்லம்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா

இளைஞர் திறன் திருவிழா நல்லம்பள்ளி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா
Published on

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார அளவில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி வட்டார இயக்க மேலாண்மை அலகு, நல்லம்பள்ளி வட்டாரம், தீனதயாள் உற்பத்தியாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நல்லம்பள்ளி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி திட்ட இயக்குனர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி மற்றும் ஷகிலா, உதவி திட்ட அலுவலர் ராஜேஷ், வட்டார மேலாளர் பிரதீப் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com