புவனகிரி அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

அக்னேஷ் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.மன உளைச்சளில் இருந்த அக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கடலூர்:

புவனகிரி அருகே பு.ஆதி வராகநத்தம் பகுதியை சேர்ந்தவர் அக்னேஷ் (வயது 18) இவர் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் இந்த வயிற்றுவலிக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வயிற்றுவலி அதிக மாகவே மன உளைச்சளில் இருந்த அக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை யடுத்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அக்னேஷ் தூக்கில் பிண மாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து புவனகிரி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அக்னே ஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com