வள்ளியூரில் பெண்ணிடம் ரூ.3 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை

வள்ளியூர் அருகே உள்ள குமாரர் குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 38). நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வள்ளியூரில் பெண்ணிடம் ரூ.3 லட்சத்தை  இழந்த வாலிபர் தற்கொலை
Published on

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள குமாரர் குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 38). விவசாயி.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்த ரமேஷ், நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் தன்னிடம் இருந்த ரூ.3 லட்சத்தை கடனாக ஒரு பெண்ணிடம் கொடுத்ததாவும், தற்போது அந்த பெண் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரமேசுக்கு ஏதேனும் கடன் ஏற்பட்டு, அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com