உளுந்தூர்பேட்டை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

சுந்தரேசன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . விவசாயி. அவருடைய மகன் சுந்தரேசன் (வயது 25).திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அவர் தனது பெற்றோரிடம் எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

இதற்கு அவரது தந்தை ஏழுமலை கடன் வாங்கி திருமணம் செய்து வைக்கிறேன் என அறிவுறுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் வீட்டில் விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர்வீ ட்டில் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ,சப் -இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com