சின்னசேலம் அருகே சாராயம் விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சின்னசேலம் அருகே சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சேண்டி மகன் ராஜேந்திரன் (வயது 39)  தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில்    ஈடுபட்டு வந்துள்ளார்.  கடந்த மாதம் 17-ம் தேதி சின்னசேலம் அடுத்த கனியாமூர் ஆற்றுப்பாலம் அருகே 60 லிட்டர் கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கையும் களவுமாக பிடித்து சாராயத்தை பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிந்து கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  

ராஜேந்திரன் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் மேலும் 2 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் கிளை சிறையில் இருந்த ராஜேந்திரனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்  கைது செய்த சின்னசேலம் போலீசார் நேற்று  கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com