பாளையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-துணி காய வைத்தபோது சம்பவம்

மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது.
பாளையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-துணி காய வைத்தபோது சம்பவம்
Published on

நெல்லை:

பாளை சமாதானபுரம் மீன்கார காம்பவுண்டில் வசித்து வருபவர் நடராஜன். இவர் பாளை மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இன்று காலை பால மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது. இதில் பாலமூர்த்தி உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com