தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் மாயம்

குடும்ப பிரச்சினை காரணமாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் விசாரணைக்காக வாலிபரை அழைத்ததால் திடீரென மாயமானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் ராஜபிரபு. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த செண்பகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருதரப்பினரும் சீர்வரிசை பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். மேலும் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு அளித்தனர்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் செண்பகா மீண்டும் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு சென்ற ராஜபிரபு அதன்பின்னர் மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜபிரபுவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com