என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் தற்கொலை
  X

  கோப்பு படம்

  திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 20). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.

  அடிக்கடி அவருடன் செல்போனில் பேசியும், வெளி இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றும் வந்துள்ளார். இந்நிலையில் எரியோடு அருகே உள்ள தூங்கனாம்பட்டியில் தனது உறவினர் வீட்டு மாடியில் இன்று தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

  இது குறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் அங்கு வந்து அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

  தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்த ஆண்டிச்சாமி உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×