ஜெயமங்கலத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேவதானப்பட்டி:

ஜெயமங்கலம் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது40). இவருக்கு அனிதா (40) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடத்துக்கு முன்பு பிரிந்து விட்டனர். மனைவி பிரிந்ததில் செந்தில் வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு தென்னந்தோப்பில் மரத்தின் உச்சியில் கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது மனைவிக்கும் ஜெயமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனைவி அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com