மது பழக்கத்தால் வாலிபர் தற்கொலை

மதுபழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து கிராமத்தை சேர்ந்தவர் குட்டிசாமி(32).

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையானதால் குட்டிசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com