போடியில் வாட்டர் பிளாண்ட்டில் வாலிபர் தற்கொலை 40 நாளில் 2-வது சம்பவம்

வாலிபர் தற்கொலை செய்த அறையிலேயே மற்றொரு வாலிபரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் தேவாரம் மெயின்ரோட்டில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பிளாண்ட் உள்ளது. இந்த மையத்தை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(24) என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.

தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த மாதம் 19-ந்தேதி வாட்டர் பிளாண்ட் அறையிலேயே கார்த்திக்கின் தம்பி கிஷோர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அந்த பிளாண்ட்டில் கிஷோரின் உறவினரான சிவகங்கை மாவட்டம் காலாப்பூரை சேர்ந்த பாண்டியன் மகன் விஜய்(19) வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை கிஷோர் தற்கொலை செய்த அறையிலேயே அவரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி டவுன்ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com