ஆண்டிபட்டி அருகே சேவல்கள் திருடிய வாலிபர் கைது

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.புகாரின்பேரில் சேவல்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே ரோசனம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது51). இவர் தனது தோட்டத்தில் செட் அமைத்து சண்ைட சேவல்கள் வளர்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இறைச்சி கடையில் அவரது சேவல்களை அஜித், சுந்தரேசன், துரைச்சாமி ஆகியோர் விற்க விலை பேசினர்.

இது குறித்து அறிந்ததும் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com