வீரவநல்லூரில் இளம்பெண் திடீர் சாவு

ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
வீரவநல்லூரில் இளம்பெண் திடீர் சாவு
Published on

நெல்லை:

அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகள் நிவேதா(வயது 20). இவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றஅவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com