search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணெய் பனை சாகுபடி செய்து வருமானம் ஈட்டலாம்
    X

    எண்ணெய் பனை சாகுபடியை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார்.

    எண்ணெய் பனை சாகுபடி செய்து வருமானம் ஈட்டலாம்

    • எண்ணெய் பனை நாற்றுகளை 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் அளவுள்ள குழிகள் தோண்டப்பட்டு குறைந்தது.
    • ஆதார், ரேஷன் நகல், சிட்டா நகல்களை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாமாயில் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு மாநில அளவில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஒரத்தநாடு வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் எண்ணெய் பனை சாகுபடிக்குஏற்ற மண் வகையும், தட்பவெ ப்பநிலையும் உள்ளது.

    இதன் காரணமாக தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய எண்ணெய் பனை இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் மேற்கண்ட வட்டாரங்களில் புதிய எண்ணெய் பனை பரப்பு விரிவாக்கத்திற்கு 300 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ரூ.60 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எண்ணெய் பனையானது மற்ற தோட்டக்கலைப் பயிர்களை ஒப்பிடும் போது அதிக மகசூல் தரக்கூடியது. எண்ணெய் பனை நாற்றுகளை 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் அளவுள்ள குழிகள் தோண்டப்பட்டு குறைந்தது 10 நாட்கள் கழித்து நடவு செய்தல் வேண்டும். நடவின்போது 9 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலம் இடைவெளி விட்டு நடவு செய்தல் வேண்டும்.

    அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை காய்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 13 டன் மகசூல் தர வல்லவை. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமான கோத்ரெட்ஜ் அக்ரோவேட் மூலம் எண்ணெய் பனை காய்கள் குளங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஆண்டிற்கான வருமானம் 1.8 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஒரு எக்டர் நிலத்திலிருந்து விவசாயிகள் வருமானம் ஈட்டலாம்.

    புதிதாக எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் உள்ள எண்ணெய் பனை நாற்றுகள் 143 எண்கள் மற்றும் இடுபொருட்கள் முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இந்த திட்டத்தில் புதிதாக பயனடையுள்ள பயனாளிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 2.5 லட்சம் மதிப்பிலான போர்வெல் மானியம், மோட்டார் மானியம், அறுவடை முன்சார் மற்றும் பின் சார் எந்திரக் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    ஆர்வமுள்ள விவசாயிகள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஒரத்தநாடு வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் வர தேவையான ஆவணங்களான பாஸ்போ ர்ட் அளவு புகைப்படம் இரண்டு, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

    நிறை தொடர்புக்கு தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வி 9943422198, ஒரத்தநாடு வட்டார தோ ட்டக்கலை உதவி இயக்குனர் சாந்தி பிரியா 9488945801, பாபநாசம் வட்டார தோ ட்டக்கலை உதவி இயக்குனர் பரிமேலழகன் 9445257303, பட்டுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி 9597059469 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×