search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு

    • தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
    • விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

    சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 119 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதா ரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவ ரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதிச்

    சீட்டினை விண்ணப்ப தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள

    லாம் அல்லது கிராம உதவியா ளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்ப

    தாரர்களுக்கு தபால் மூலம் தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில், கிராம உதவி யாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, இணையதளம் வாயி லாக வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீ லனைசெய்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சல்

    முகவரிக்கும், குறுஞ்செய்தி யாக அனுப்பப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த தேர்வுக்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அணியாபுரம் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, வேலூர், குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆர். தொழில்நுட்ப கல்லூரி. கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டவர்கள், 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்குள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டுடன் வரவேண்டும். தேர்வு எழுத கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே விண்ணப்பதாரர்கள் பயன்ப டுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எந்த பொருட்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×