மரத்தை வெட்டியபோது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது அவரது கைபட்டதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே இறந்தார்.தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கியதில் மரத்திலேயே இறந்து கிடக்கும் சின்னத்தம்பி.
மின்சாரம் தாக்கியதில் மரத்திலேயே இறந்து கிடக்கும் சின்னத்தம்பி.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது42) .

இவர் சம்பவத்தன்று ் அருகில் இருந்த முருங்கை மரத்தில் ஏறி கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது அவரது கைபட்டதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே இறந்து கிடந்தார்.

இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com