பாம்பு கடித்து தொழிலாளி சாவு

மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
Published on

காங்கயம் :

காங்கயம் அருகே மருதுறை, காளிவலசு பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (வயது 45). கூலி தொழிலாளியான இவா் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, முருகேசனை பாம்பு கடித்துள்ளது. இது குறித்து உறவினா்களுக்கு முருகேசன் தகவல் தெரிவித்துள்ளாா். அவா்கள் முருகேசனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com