மூன்றடைப்பு அருகே தொழிலாளி திடீர் சாவு

நெல்லையை அடுத்த மூன்றடைப்பு மேலூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பால்துரை(வயது 30). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லை.இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றடைப்பு அருகே தொழிலாளி திடீர் சாவு
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த மூன்றடைப்பு மேலூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பால்துரை(வயது 30). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லை. இவர் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் இரவு பணிக்கு சென்ற அவர், அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com