என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குரங்கணியில் போதையில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்6 Oct 2022 11:25 AM IST
- தொழிலாளி குடி போதையில் தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- மேல் சிகிச்சை க்காக தேனிக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜமீன் தோப்பு ரோடு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 36). கூலி வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
இதனால் கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை பாதிக்க ப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரன் நேற்று குடி போதையில் தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு மேல் சிகிச்சை க்காக தேனிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X