மாஞ்சோலையில் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி காயம்

அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது. ஜெஸ்சியை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது.
மாஞ்சோலையில் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி காயம்
Published on

கல்லிடைக்குறிச்சி:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது. இங்கு தினந்தோறும் காலையில் தேயிலை பறிப்பதற்காக ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு செல்வது வழக்கம்.

அதன்படி இன்று காலை நாலுமுக்கு தேயிலை தோட்டத்திற்கு ஜெஸ்சி (வயது 55) என்ற பெண் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது.

இதனால் ஜெஸ்சி அலறி ஓடினார். அப்போது அவரை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு மாஞ்சோலையில் உள்ள எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com