search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மா, தென்னை  விவசாயிகளுடன்  கலந்துரையாடல் கூட்டம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    மா, தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்

    • மா அறுவடை நெருங்கும் நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும்.
    • மா பயிர்களுக்கு உண்டான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் அறிவியல் மையம், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மா, தென்னை விவசாயிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    தென்னை விவசாயிகள் பேசியதாவது:-

    தென்னை பூச்சி நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி உற்பத்தியை அதிகரித்து வழங்க வேண்டும். தென்னையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை, போச்சம்பள்ளி சிப்காட்டில் தொடங்கிட வேண்டும். தென்னை மரங்களுக்கு மருந்து தெளிக்க தெளிப்பான்கள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் பதில் அளித்து பேசியதாவது:-

    மா இழப்பீடு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும். மா அறுவடை நெருங்கும் நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் போலி பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தடுக்க, வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும். பருவமற்ற காலங்களில் பயிரிப்படும் மா பயிர்களுக்கு உண்டான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு கருத்துரு தயார் செய்து, அனுப்ப தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமதுஅஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவரும், பேராசிரியருமான சிவக்குமார், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி சுந்தர்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, விவசாய பிரதிநிதி மற்றும் தென்னை, மா விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×