search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
    X

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

    • வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, மற்றும் உடுமலை, அமராவதி என உள்ளிட்ட 6 வனசரகங்கள் உள்ளன.

    இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கும் உடுமலை வனக்கோட்டத்திற்கும் உட்பட்ட 6 வனச்சரகங்களில் 115 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியின் போது மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    Next Story
    ×