மனைவி-குழந்தைகள் கதி என்ன? ஒடிசா தொழிலாளி சென்னையில் தவிப்பு

ரெயில் பாலசோரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.பதட்டம் அடைந்த சுஜதன்சாகு மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
மனைவி-குழந்தைகள் கதி என்ன? ஒடிசா தொழிலாளி சென்னையில் தவிப்பு
Published on

சென்னை:

ஒடிசா மாநிலம் பாலசோரை சேர்ந்தவர் சுஜதன் சாகு. இவர் சென்னை காட்டுப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி சந்தியா ராணி சாகு, மகன்கள் சுகந்து சாகு (11), சுப்ராந்து சாகு (3) ஆகியோருடன் நேற்று முன்தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாலசோரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார். இந்த ரெயில் பாலசோரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.

இதனால் பதட்டம் அடைந்த சுஜதன்சாகு மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அவர்களது கதி என்ன என்று தெரியாமல் சென்னையில் அவர் தவித்து கொண்டிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com