ஏரியில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி

கருமந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார்.
ஏரியில் குளிக்கச் சென்ற  பாலிடெக்னிக் மாணவர் பலி
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கரு மந்துறை யில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் மகன் பிரவீன்(வயது 18) விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் 5 மாணவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com