சுவாமிமலை கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி

தெப்ப திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி நடைபெற உள்ளது.குழாய் வழியாக நேத்திர புஷ்கரணி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பட்டு வருகிறது.
கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பட்டு வருகிறது.
Published on

சுவாமிமலை:

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக நேத்திர புஷ்கரணி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் குளத்தில் இறங்காமல் இருக்க கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com