மோட்டார்சைக்கிள்களில் இருந்து தவறி கீழே விழுந்த வாட்ச்மேன் சாவு

பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்களில் இருந்து தவறி கீழே விழுந்த வாட்ச்மேன் பலியானார்.
மோட்டார்சைக்கிள்களில் இருந்து தவறி கீழே விழுந்த வாட்ச்மேன் சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி பாவடி தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 48). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பரமத்தி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வேலூரில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை சின்னப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com