இருதரப்பினர் மோதல்; 33 பேர் மீது வழக்கு

ராஜபாளையத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு இந்த விரோதம் இருந்து வந்தது.
இருதரப்பினர் மோதல்; 33 பேர் மீது வழக்கு
Published on

விருதுநகர்

ராஜபாளையம் சோலைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து குருசாமி தரப்பினரும், கண்ணன் தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுபற்றி குருசாமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கண்ணன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குருசாமி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com