search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    13 ஆண்டுகளுக்கு பிறகு மணல், ஜல்லி மாற்றி புதுப்பிக்கும் பணி
    X

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    13 ஆண்டுகளுக்கு பிறகு மணல், ஜல்லி மாற்றி புதுப்பிக்கும் பணி

    • ராஜபாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மணல், ஜல்லி மாற்றி புதுப்பிக்கும் பணி நடந்தது.
    • இதனை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    சுமார் 2½ லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ராஜபாளையம்- அய்யனார்கோவில் ரோட்டில் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நகராட்சி குடிநீர் தேக்க ஏரி உள்ளது.

    இந்த ஏரியை சேர்ந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் 6-வது மைல்கல் அருகில் உள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 13-ஆண்டுகளுக்கு பின்னர், தண்ணீர் சுத்திகரிப்புக்கு தேவையான தரமான ஆற்று மணல்கள் மற்றும் ஜல்லிகளை கொண்டு மாற்றி அமைத்து நடவடிக்கை எடுத்த அவர், நகராட்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

    பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை ராஜபாளையம் நகர மக்கள் பயன்படுத்த சேமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியையும் ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா, ஆற்றுநீர் விரையம் ஆகாமல் முறையாக சேமிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து 6-வது மைல்நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார்.

    Next Story
    ×