search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கட்டணத்தை  குறைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம்
    X

    ராஜபாளையம் நகரசபை கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா தலைமையில் நடந்தது.

    குடிநீர் கட்டணத்தை குறைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

    • உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை குறைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தி.மு.க உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் பவித்ராஷியாம்ராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கல்பனாகுழந்தைவேல் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ராமலிங்கம்,நகர்நல அலுவலர் சரோஜா மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தலைவரின் நேர்முக உதவியாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.

    ராஜபாளையம் நகராட்சி யில் குடிநீர் கட்டணம் 2022-23 முதல் சதுர அடிக்கு ஏற்ப பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை பொது மக்களின் நலன் கருதி குடியிருப்புகளுக்கு 500சதுர அடிக்கு குறைவானதுக்கு மாதம் ஓன்றுக்கு ரூ.100 என்றும், 500 சதுர அடிக்கு மேல் ரூ.150 என்றும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 300 சதுர அடிக்கு குறைவானதுக்கு ரூ.200 என்றும், 300 முதல் 500 சதுர அடிவரை ரூ.300 என்றும், 501 முதல் 1000 சதுர அடிவரை ரூ.450 என்றும், 1001 சதுர அடிக்கு மேல் ரூ.570 என்றும் நிர்ணயம் செய்ய தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா அதிரடியாக கொண்டு வந்த குடிநீர் வரி குறைப்பு தீர்மானம் உட்பட73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குடிநீர் கட்டண குறைப்பு தீர்மானத்தை தி.மு.க உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

    Next Story
    ×