தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும்.
தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை  பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
Published on

விருதுநகர்

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை 8-ந் தேதி சென்னை வருகிறார். அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும். இந்த ரெயில் ஞாயிற்க்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்கத்தில் திங்கட்கிழமை செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும். 20683 என்ற எண் கொண்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 10.50 செங்கோட்டை செல்லும்.

மறுமார்கத்தில் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும். விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய நிறுத்தங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.

9-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 2 மாதங்களுக்கு இந்த வாராந்திர ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com