search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் கலைவிழா போட்டிகள்
    X

    காளீஸ்வரி கல்லூரியில் நடந்த கலைவிழா போட்டி தொடக்க நிகழ்ச்சியில்

    பங்கேற்றவர்கள்.

    காளீஸ்வரி கல்லூரியில் கலைவிழா போட்டிகள்

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார கலை மன்றம் மற்றும் சிவகாசி மாநகராட்சி இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கோலப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

    இதில் மொத்தம் 158 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பற்றியும், தூய்மை இந்தியா இயக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். மேலும் கழிவு மேலாண்மை, மீண்டும் மஞ்சைப் பை திட்டம், பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.

    முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை வணிகவியல் உதவிப்பேராசிரியர் சரஸ்வதி செய்திருந்தார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நன்றி கூறினார்.

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் "இந்திய கப்பற்படை அதிகாரிக்கான நுழைவு வாயில்" என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர், பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    லெப்டினன்ட் கிருஷ்ணன், இந்திய கப்பல் படையில் பணி அனுபவங்கள் குறித்தும், பணி நியமன முறை குறித்தும், ஊதிய வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தேசிய மாணவர் படை அதிகாரி கணேஷ்பாபு நன்றி கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் 800 பேர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    Next Story
    ×