சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர் அருகே சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
Published on

வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்திலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் பக்தர்கள் வீடு திரும்பினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com