search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி
    X

    அருப்புக்கோட்டையில் மேற்கு புறவழிசாலை அமைக்கும் பணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

    மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி

    • அருப்புக்கோட்டையில் ரூ.133.5 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- விருதுநகர் சாலையில் உள்ள துணைமின் நிலையம் அருகில் ரூ.133.5 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை -மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    இந்த புறவழிச் சாலை யானது அருப்புக்கோட்டை- கோவிலாங்குளம் விலக்கில் ஆரம்பித்து வலதுபுறம் பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.

    இதனுடைய தூரம் 10 கி.மீ. ஆகும். 35.25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. ரூ.98.58 கோடி சாலை பணிக்கும், ரூ.35.4 கோடி நில எடுப்புக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் போது விருதுநகர், ராஜபாளையம், தென்காசியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்திற்கும், ராமேசுவரம், ராமநாதபு ரத்தில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்கா சிக்கும் செல்லும் வாக னங்கள் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறு கலானஅருப்புக்கோட்டை நகர பகுதியை தவிர்த்து பயணிக்க ஏதுவாக அமையும்.

    அதேபோல், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசலுள்ள நகர பகுதிகளை தவிர்த்து, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சிரமமின்றி பயணம் செய்யவும், பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் வாகன நெரிசலுள்ள நகர பகுதியை தவிர்த்து

    சுலபமாக பயணிக்க ஏதுவாக இந்த புறவழிச்சாலை அமையும். மேலும், அருப்புக்கோட்டை நகரபகுதியில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண்கரெட், கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவபிரகாசம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×